அசலங்காவின் கேட்ச்சின் மூலம் சதத்தை தவறவிட்ட ரச்சின் ரவீந்திரா - காணொளி!

Updated: Wed, Jan 08 2025 21:22 IST
Image Source: Google

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. 

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஜனித் லியானகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடக்க, அவருடன் இணைந்து விளையாடிய லியானகே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த கமிந்து மெண்டிஸூம் 64 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இலங்கை அணி 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திரா சதத்தை நோக்கி விளையாடி வந்த நிலையில் இலங்கை கேப்டன் சரித் அசலங்கவின் அசத்தலான கேட்ச் மூலம் தனது விக்கெட்டை இழந்தார். அதன்படி இன்னிங்ஸின் 23ஆவது ஓவரை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ரச்சின் ரவீந்திரா பவுண்டரி அடிக்கும் முயற்சியில் ஆஃப்சைட் திசையில் அடித்தார்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் அது மிஸ் ஷாட்டாக மாறிய நிலையில், பந்து கவர் திசையை நோக்கி சென்றது. அப்போது அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா அசத்தலான டைவை அடித்ததுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் இப்போட்டியில் 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இலங்கை வீரர் சரித் அசலங்கா பிடித்து கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை