அபாரமான கேட்ச்களை பிடித்த பால் பாய்; பாராட்டிய காலின் முன்ரோ!

Updated: Tue, Mar 05 2024 14:23 IST
Image Source: Google

ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஷதாப் கானின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெஷாவர் ஸால்மி அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ஹரிஸ், டாம் கொஹ்லர் காட்மோர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஆனாலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமர் ஜமால் அதிரடியாக விளையாடி 87 ரன்களைச் சேர்த்த போதும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியது. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்திய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் கேப்டன் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியின் போது பவுண்டரில் எல்லையில் பால் பாயாக இருந்த இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து கேட்ச்களை பிடித்து அசத்தினார். அதிலும் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த காலின் முன்ரோவால் கேட்சை பிடிக்கமுடியாமல் போக, அந்த இளைஞர் அடுத்தடுத்து கேட்ச்களிஅ பிடித்தார். இதையடுத்து அந்த இளைஞரை காலின் முன்ரோ கட்டியணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை