அறிமுக ஆட்டத்தில் டாக் அவுட்டான ஜார்ஜியா வோல் - வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் நடத்திர வீராங்கிய டியாண்டிரா டோட்டின் யுபி வாரியர்ஸ் அணியின் அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல்வை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவமான இன்னிங்ஸின் முதல் ஓவரில் நடந்தது. குஜராத் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டோட்டின் அந்த ஓவரில் கிரண் நவ்கிரே மற்றும் ஜார்ஜியா வோல்வின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீராங்கனை ஜார்ஜியா வோல் முதல் ஓவரின் ஐந்தாவத பந்தை எதிர்கொண்ட நிலையில், அதனை சரியாக கணிக்க தவறின் க்ளீன் போல்டாகினார். மேற்கொண்டு தனது அறிமுகா ஆட்டத்தில் ஜார்ஜியா வோல் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகியது யுபி வாரியர்ஸ் அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக சமாரி அத்தபத்து தொடரில் இருந்து விலகியதை அடுத்து ஜார்ஜியா வோல் யுபி வாரியர்ஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 17 பவுண்டரிகளுடன் 96 ரன்களைச் சேர்த்திருந்தார். மேற்கொண்டு ஹர்லீன் தியோல் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸுக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அந்த அணியில் அதிகபட்சமாகவே கிரேஸ் ஹாரிஸ் 25 ரன்களையும், சின்னெல்லே ஹென்றி 28 ரன்களையும், உமா சேத்ரி 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் யுபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தியது.