புவனேஷ்வர் குமார் ஓவரில் அதிரடி காட்டிய துருவ் ஜூரெல், ஷுபம் தூபே - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில், விராட் கோலி 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும், பில் சால்ட் 26 ரன்களையும், டிம் டேவிட் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்ம 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ரயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்ம 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களையும், துருவ் ஜூரெல் 43 ரன்களையும், நிதீஷ் ரானா 28 ரன்களையும், ரியான் பராக் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து194 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட துருவ் ஜூரெல் சிக்ஸர் அடித்து அசத்தியதுடன் அடுத்த பந்தில் சிங்கில் எடுத்தார். பின்னர் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஷுபம் தூபேவும் சிக்ஸரை விளாச ஆட்டத்தின் மீதான பரபரப்பும் அதிகரித்தது.
பின்னர் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட துருவ் ஜூரேல் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அசத்தினர். இதன்மூலம் புவனேஷ்வர் குமார் வீசிய் அந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 22 ரன்களைக் குவித்தது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அந்த ஓவரில் துருவ் ஜூரெல் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஷுபம் தூபேவும் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துவிட்டது. இந்நிலையில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.