நிக்கோலஸ் பூரனின் சிக்ஸரால் காயமடைந்த ரசிகர் - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் 60 ரன்களையும், சாய் சுதர்ஷன் 56 ரன்களையும் சேர்த்த நிலையில் அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் ஷர்தூல் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 58 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஷ் பதோனி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் அடித்த ஒரு சிக்சர் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகரை தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆட்டத்தில் பூரன் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகரின் தலையில் பலமாக தாக்கியதுடன், இரத்தப்போக்கையும் ஏற்படுத்தியது.
இதனால் மிகுந்த வலியுடன் இருந்த அந்த ரசிகருக்கு மைதானத்திலேயே முதலுதவியும் அளிக்கப்பட்டது. அதில்மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அவரது தலையில் கட்டும் போடப்பட்டுள்ளது. அந்த ரசிகர் மிகவும் மோசமாக காயமடைந்திருந்தாலும், அவர் போட்டியை தொடர்ந்து உற்சாகமாக காண்டுகளித்தார். இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸரில் ரசிகர் ஒருவர் காமயடைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் வழக்கமல் போல் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியதுடன், 23 பந்துகளில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் அவர் ஒரு பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4 அரைசதங்களுடன் 349 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.