மீண்டும் அசத்திய பிலிப்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த விராட் -வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே நீக்கப்பட்டு டேரில் மிட்செல் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணி வீரர் விராட் கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டியாகவும் இது அமைந்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 2 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மாவும் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து 11 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, கிளென் பிலீப்ஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை மேட் ஹென்றி வீசிய நிலையில் அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி கட் ஷாட் மூலம் பவுண்டரி அடிக்க முயற்சித்த நிலையில் அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கிளென் பிலீப்ஸ் அபாரமான டைவை அடித்ததுடன் கேட்ச் பிடித்து அசத்தினார். பிலீப்ஸின் கேட்ச்சை கண்ட விராட் கோலி அவர் எப்படி அந்த பந்தை பிடித்தார் என்ற ஆச்சரியத்துடன் ஒருகணம் திகைத்து நின்றனார்.
மேற்கொண்டு பிலீப்ஸின் இக்கேட்சை கண்ட ஒட்டுமொத்த ரசிகர்களும் ஒரு கணம் அதிர்ச்சியில் உரைந்தனர். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின் ஜோடி சேர்ந்தந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் மூயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இந்திய அணி இந்த சரிவிலிருந்து மீண்டெழுமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்