4,4,4,4,4: அபிஷேக் சர்மா பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இஷான் கிஷன் - காணொளி!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் வீரர்கள் மேகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதற்காக அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றையை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷான் அடுத்தடுது பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
அதிலும் குறிப்பாக அபிஷேக் சர்மா பந்துவீச்சில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசினார். அதன்படி, இந்த முழு சம்பவமும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இரண்டாவது இன்ட்ரா-ஸ்குவாட் போட்டியின் போது நடந்தது. இதில் இஷான் கிஷன் எஸ்ஆர்எச் ஏ அணிக்காகவும், அபிஷேக் சர்மா எஸ்ஆர்எச் பி அணிக்காக விளையாடினார். இதில் எஸ்ஆர்எச் ஏ அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இஷான் கிஷான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 19 பந்துகளில் 49 ரன்களைக் குவித்தார்.
இதற்கிடையில், எஸ்ஆர்எச் பி அணிக்காக அபிஷேக் சர்மாவும் ஒரு ஓவரை வீச வந்த நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட இஷான் கிஷன் தொடர்ச்சியாக ஐந்து பவுண்டரிகளை அடித்தார். இஷான் தனது ஓவரில் அபிஷேக் சர்மாவை வீழ்த்திய விதத்தைப் பார்த்து, ஒரு கட்டத்தில் அவர் மிகவும் வருத்தமடைந்து, ஒரு நோ பால் கூட வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த ஓவரில் மட்டும் 23 ரன்களை விளாசினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.