ஹெலிகாப்டர் ஷாட்டை பயிற்சி செய்யும் ஜோஸ் பட்லர்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவடு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், அவர் வலை பயிற்சியின் போது ஹெலிக்காப்டர் ஷாட்டுகளை விளையாடி பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் ஷாட்டுகளை விளையாடிய காணொகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா, அவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, டாம் கோஹ்லர்-காட்மோர், அபித் முஷ்டாக், நந்த்ரே பர்கர்.