ஃபீல்டிங்கில் அசத்திய கேன் வில்லியம்சன்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தன்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தன்ஸித் ஹசன் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ், தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நஜ்முல் ஹொசைன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தனது அபாரமான ஃபீல்டிங் காரணமாக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதன்படி மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தன்ஸித் ஹசன் முதலில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் 21வது ஓவரின் மூன்றாவது பந்தில் தௌஹித் ஹிரிடோயும் வில்லியசனின் சிறப்பான கேட்சை எடுத்தார்.
அதன்படிமைக்கெல் பிரேஸ்வெல் வீசிய 21ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை ஃபுல் லெந்தில் வீச, அதனை எதிர்கொண்ட தாவ்ஹித் ஹிரிடோய் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அடிக்க நினைத்து விளாசினார். ஆனால் அவரால் அந்த ஷாட்டை முழுமையாக விளையாடமுடியாத நிலையில், பந்து காற்றில் பறக்க, கேன் வில்லியம்சன் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இந்நிலையில் கேன் வில்லியம்சன் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது .
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்