ஐபிஎல் 2022: ஹாட்ரிக் எடுத்தவர்கள் பட்டியலில் இணைந்த சஹால்!

Updated: Tue, Apr 19 2022 11:53 IST
Image Source: Google

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யசுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 17ஆவது ஓவரில் அவர் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தவர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இது ஐபிஎல் வரலாற்றில் 21ஆவது ‘ஹாட்ரிக்’ நிகழ்வாகும்.

இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக யுவராஜ்சிங் ஒரே ஆண்டில் 2 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்தார். 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படவில்லை.

 

ஐபிஎல் தொடரில்‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர்கள்: அமித் மிஸ்ரா ( 3 தடவை), யுவராஜ்சிங் (2 முறை), எல்.பாலாஜி, நிதினி, ரோகித் சர்மா, பிரவீண்குமார், அஜீத் சண்டிலா, சுனில் நரீன், பிரவீன் தாம்பே, வாட்சன், அக்‌ஷர்பட்டேல், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரூடை, ஜெயதேவ் உனட்கட், சாம்கரண், ஸ்ரேயாஸ் கோபால், ஹர்‌ஷல்படேல், யசுவேந்திர சாஹல் (தலா 1 முறை).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை