பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!

Updated: Sun, Jul 27 2025 19:14 IST
Image Source: Google

Michael Bracewell Catch: முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிரடியாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் 31 ரன்களைச் சேர்த்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். 

ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்களைச் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 51 ரன்களையும், ரீஸா ஹென்றிஸ் 37 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

குறிப்பாக கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தும் தோல்வியைத் தழுவியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் மேட் ஹென்றி வென்றுள்ளார். 

இந்நிலையில் இப்போட்டியில் மைக்கேல் பிரேஸ்வெல் பிடித்த அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன்படி இப்போட்டியின் கடைசி ஓவரை மேட் ஹென்றி வீசிய நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் அந்த ஓவரை எதிர்கொண்டார். அப்போது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பிரீவிஸ் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை சிறப்பாக விளையாடியும் இருந்தார். 

Also Read: LIVE Cricket Score

இதனால் அந்த பந்து சிக்ஸருக்கு சென்றது என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மைக்கேல் பிரேஸ்வெல் சிக்ஸருக்கு சென்ற பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் காரணமாக இப்போட்டியில் 31 ரன்களை மெட்டுமே எடுத்திருந்த டெவால்ட் பிரீவிஸ் ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல்லின் இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை