சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!

Updated: Sat, May 04 2024 15:13 IST
சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகார் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களையும், மனீஷ் பாண்டே 42 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.  மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதையடுத்து இப்போட்டியில் அரைசதம் கடந்த அணியின் வெற்றிக்கு உதவிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அச்சயம் கேகேஆர் அணி தரப்பில் 19ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச, ஓவரின் முதல் பந்தி டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார். இதனால் மும்பை அணியின் வெற்றியும் கைகூடும் நிலை இருந்தது. 

 

ஆனால் அதன்பின் இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த டேவிட் 24 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய பியூஷ் சாவ்லாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின் அந்த ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஜெரால்ட் கோட்ஸி, மிட்செல் ஸ்டார்க் வீசிய அபாரமான யார்க்கர் பந்தை கணிக்க தவறி க்ளீன் போல்டாகினார். 

 

நடப்பு ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், பெரிதளவில் சோபிக்க தவறிவந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அவர் தனது ஃபார்மிற்கு திரும்பிவிட்டதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது வரைலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை