சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த்துடன் இணைந்து நடனமாடிய எம் எஸ் தோனி - காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதிலும் இவ்விரு அணிகளும் மோதும் முதல் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களில் வரவேற்பையும் பெற்றிஉருந்தது.
இந்நிலையில், இந்திய அணி வீரர் ரிஷப் பந்தின் சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி சென்னையில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம் எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் இணைந்து நடனமாடிய காணொளியானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் அவர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அதன்பின் தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். அதிலும் இந்த சீசனானது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக கூட இருக்கலாம் என்ற தகவல்களும் அவ்வபோது வெளியாகி வருகின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடரில் இதுவரை 264 போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி 39.13 என்ற சராசரியில் 5,243 ரன்களை குறித்துள்ளார். மேற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்டநாள் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, தனது தலைமையின் கீழ் 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று, ஐபிஎல் தொடரில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் எனும் பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.