சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டா ஸ்வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது கேப்டன் ஷான் மசூத் மற்றும் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக்கின் அபாரமான சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர மிடிவில் 328 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 151 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் சகீல் 35 ரன்களுடனும், நசீம் ஷா ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர்.
இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களையும் கடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நஷீம் ஷா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷா அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் 81 பந்துகளை எதிர்கொண்ட நசீம் ஷா 33 ரன்களைச் சேர்த்தார். அதில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களையும் விளாசினார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் மற்றும் ஜேக் லீச் ஆகியோரது பந்துவீச்சில் இமாலாய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். இந்நிலையில் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர்.