ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி - காணொளி

Updated: Thu, Jul 10 2025 18:14 IST
Image Source: Google

Lord's Test: இந்திய அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஸாஉ கிரௌலி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் இணைந்த ஜோ ரூட் - ஒல்லி போப் இணை விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதன் காரண்மாக இங்கிலாந்து அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 24 ரன்களுடனும், ஒல்லி போப் 12 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை நிதிஷ் ரெட்டி வீசிய நிலையில் மூன்றாவது பந்தில் பென் டக்கெட்டையும், ஓவரின் கடைசி பந்தில் ஸாக் கிரௌலியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதையடுத்து நிதிஷ் ரெட்டி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர். 

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை