விடிய விடிய பார்ட்டி நடத்திய இங்கிலாந்து, ஆஸி வீரர்கள்; வைரல் காணொளி!

Updated: Tue, Jan 18 2022 15:56 IST
Image Source: Google

உலகின் மிகவும் பிரபலமான இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் மிகவும் மோசமாக தோல்வியடைந்தது.

முதல் டெஸ்டில், 9 விக்கெட்கள், 2ஆவது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசம், 3ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசம், 5ஆவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசம் என படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இவ்வளவு மோசமாக விளையாடி ரசிகர்கள் பார்த்தது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் விடிவிடிய மதுபானம் அருந்தி பார்ட்டி நடத்தியது, பின் காவல்துறையினர் அவர்களை எச்சரிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதன்படி ஐந்தாவது போட்டி முடிவுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி, ட்ராவிஸ் ஹெட், நாதன் லயன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் விடிவிடிய மதுபாட்டிகளுடன் ஹோட்டல் மாடியில் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது அங்குவந்த காவல்துறையினர் பார்ட்டியை நிறுத்திவிட்டு தங்களது அறைகளுக்கு திரும்புங்கள் என்று எச்சரித்தனர். இதனையடுத்து வீரர்கள் தங்களது அறைகளுக்கு திரும்புவது போன்று அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து வீரர்கள் விடிய விடிய மதுக்கொண்டாடத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இக்காணொளியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::