ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நவீன் உல் ஹக்கிற்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணியில் ரிங்கு சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து களமிறங்கிய் லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய தீபக் ஹூட களமிறங்கியது முதலே தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை கேகேஅர் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் வீச, அதனை கவர்ஸ் திசையில் தீபக் ஹூட அடிக்க முயற்சித்தார்.
ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு நேராக பாய்ண்ட் திசையை நோக்கி சென்றது. அப்போது அத்திசையில் ஃபில்டிங் செய்துகொண்டிருந்த ரமந்தீப் சிங் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாவி பந்தை பிடித்து அசத்தினார். இதனால் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த தீபக் ஹூடா தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ரமந்தீப் சிங் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.