கரோனா வைரஸை எதிர்கொள்ள ஐடியா கொடுக்கும் ஜடேஜா!

Updated: Sat, May 08 2021 19:32 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மக்களிடையே எவ்வாறு கரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவிந்திர ஜடேஜாவும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அக்காணொலியில் “எல்லாரும் வீட்டில் இருங்க, பாதுகாப்பாக இருங்கள். உங்களது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்ல வேண்டும். தொடர்ந்து முகக்கவசம், கிருமி நாசினி பயன்படுத்துங்கள். உங்களை சுற்றி இருக்கின்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::