அசத்தலான கேட்ச் மூலம் ஷெஃபெர்ட்டை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -காணொளி

Updated: Sun, Jul 27 2025 19:46 IST
Image Source: Google

Glenn Maxwell Video: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை ஆடம் ஸாம்பா விசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரொமாரியோ ஷெஃபெர்ட் லான் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை விளையாடிய போது ஒரு கணம் பந்து சிக்ஸருக்கு சென்றுவிடும் என்று தோன்றியது.

அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கிளென் மேக்ஸ்வேல் அபாரமாக தாவி பந்தை பிடித்ததுடன், எல்லைக்கோட்டை தாண்டுவதற்கு அதனை கேமரூன் க்ரீனிடம் பந்து தூக்கி எறிந்தார். க்ரீனும் அந்த பந்தை லாவகமாக பிடித்தார். இதன் காரணமாக ரொமாரியோ ஷெஃபெர்ட் 28 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் மேக்ஸ்வெல் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 51 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை