விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்; ருத்ர தாண்டவமாடிய கெய்க்வாட்!

Updated: Mon, Nov 28 2022 13:44 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஜம்மூ காஷ்மீர், அஸ்ஸாம், சௌராஷ்டிரா ஆகிய அணிகள் முன்னேறின. 

இதன் இரண்டாவது காலிறுதிச்சுற்றுல்  மகாராஷ்ட்ரா அணி உத்திரப்பிரதேச அணியை எதிர்கொண்டன். இதில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்ட்ரா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்களை அடித்தர். இப்போட்டியில் மொத்தம் 159 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் உட்பட 220 ரன்களை சேர்த்தார்.

 

அதிலும் உத்திரப்பிரதேச அணி வீரர் ஷிவா சிங் வீசிய 49 ஆவது ஓவரில் நோ பால் உட்பட அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை