ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் சன்ரைசர்ஸின் ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கினார். அதன்படி இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை சாய் கிஷோர் வீசிய நிலையில், ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஹென்ரிச் கிளாசென் பெரிய ஷாட்டை விளையாடும் முயற்சியில் பந்தை தவறவிட்டார். இதனால் இப்போட்டியில் 27 ரன்கள் எடுத்திருந்த கையோடு அவர் விக்கெட்டையும் இழந்தார். இந்நிலையில் கிளாசென் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி
இம்பேக்ட் வீரர்கள் - அபினவ் மனோகர், சச்சின் பேபி, சிமர்ஜித் சிங், ராகுல் சாஹர், வியான் முல்டர்
குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்