அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Mar 25 2025 21:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தார். 

இதில் சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையிலும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதேசமயம் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் சாய் கிஷோர் தனது அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அதன்படி, இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை சாய் கிஷோர் வீசிய நிலையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட அஸ்மதுல்ல ஒமார்ஸாய் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் அந்த ஷாட்டில் போதுமான அளவு வேகம் இல்லாததால் அது நெரடியாக ராகுல் திவேத்தியாவிடன் கேட்ச் கொடுத்தார். 

இதனால் இப்போட்டியில் 16 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களிமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது வழக்கமான ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை விளையாடும் முயற்சியில் பந்தை தவறவிட்டதுடன் எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்து டக் அவுட்டாகினார். இந்நிலையில் சாய் கிஷோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது. 

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(c), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷேட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பேக்ட் பிளேயர்: நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக் விஜய்குமார், ஹர்ப்ரீத் பிரார், விஷ்ணு வினோத்

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் பிளேயர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை