அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் - காணொளி!

Updated: Fri, Jan 03 2025 11:51 IST
Image Source: Google

பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்படி, இந்திய அணியின் இன்னிங்ஸின் 57ஆவது ஓவரை ஸ்காட் போலண்ட் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த் வழக்கம் போல் அடிக்க முயன்று பேட்டை சுழற்றினார். ஆனால் பந்து அவர் நினைத்த வேகத்தில் இல்லாத காரணத்தால் 30யார்ட் வைட்டத்திற்குள் இருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 40 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் சதம் அடித்த இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்ய களமிறங்கினார். முதல் பந்தை எதிர்கொள்ளும் அவருக்கு அவுட் சைட் ஆஃப் திசையில் போலண்ட் பந்துவீச அதனை தடுக்க முயன்ற நிதீஷ் ரெட்டியும் ஸ்லீப் திசையில் இருந்த் ஸ்டீவ் ஸ்மித்துடம் கேட்ச் கொடுத்து  பந்துவீச்சில் களமிறங்கிய இளம் அதிரடி ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டி இழந்து டக் அவுட்டானர். 

இந்நிலையில் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி இதுவரை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்..

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை