ஆயூஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த தோனி - காணொளி!

Updated: Tue, Apr 15 2025 14:03 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேக் ரஷீத் 27 ரன்களும், ரவீந்திரா 37 ரன்களும், திரிபாதி 9 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும், விஜய் சங்கர் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த  ஷிவம் துபே 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்களையும், தோனி 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்க்க, சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்த ஸ்டம்பிங் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசிய நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட லக்னோ வீரர் ஆயூஷ் பதோனி இறங்கி வந்து பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்தார். ஆனால் அவர் இறங்கி வருவதை சூதாரித்த ஜடேஜா பந்தை வழக்கத்தை விட வேகமாக வீசினார். 

இதனை சற்றும் எதிர்பார்க்கப்பட்ட ஆயூஷ் பதோனி பந்தை முழுமையாக தவறவிட்டார். இதனையடுத்து விக்கெட்டுக்கு பின்னால் பந்தை பிடித்த எம் எஸ் தோனி சற்று ஆக்ரோஷத்துடன் ஸ்டம்பிங் செய்த பதோனியை வெளியேற்றினார். ஏனெனில் இப்போட்டியில் பதோனி மூன்று முறை ஆட்டமிழந்த நிலையிலும் அதிலிருந்து தப்பி இருந்தார். இதன் காரணமாக தோனி சற்றும் கடுப்பில் இந்த ஸ்டம்பிங்கை செய்திருந்தார். இந்நிலையில் தோனியின் ஸ்டம்பிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த(கேப்டன்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி

இம்பாக்ட் வீரர்கள்: ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது, மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(கேப்டன்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

Also Read: Funding To Save Test Cricket

இம்பாக்ட் வீரர்கள்: ஷிவம் துபே, கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், சாம் குர்ரன், தீபக் ஹூடா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை