இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா நடனம்!

Updated: Mon, Apr 24 2023 17:08 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பெங்களூரு அணி விளையாடும் போட்டிகளை காண அனுஷ்கா சர்மா அவ்வப்போது மைதானம் வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடிய ஆட்டத்தை காண அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு வந்திருந்தார். இப்போட்டியில் ஆர்சிபி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

 

இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் விராட் கோலியுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனமாடும் காணொளியை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை