SA vs IND: பவுமாவுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோலி!

Updated: Thu, Jan 20 2022 11:36 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வியைத் தழுவியது. மேலும் விராட் கோலி இந்தப் போட்டியில் சாதாரண வீரராக விளையாடினார். கேப்டன் என்ற பொறுப்பு இருக்கும் போதே கோலி ஆக்கோரஷமாக இருப்பார். இப்போது கேட்கவா வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவும், வெண்டர் டுசனும் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் கேப்டன் பெவுமா 110 ரன்களும், வெண்டர் டுசன் 129 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு ஆதிக்கம் செலுத்தினர். இதனால் கடுப்பான விராட் கோலி, தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.

பவுமா ரன் எடுக்க முயற்சித்த போது, கோலி நேராக பவுமாவை பார்த்து ஓங்கி எறிந்தார். அப்போது பவுமாவிடம் நான் இனி கேப்டன் கிடையாது. போட்டி முடிந்ததும் யாரிடமும் கைக் கட்டி நிற்க தேவையில்லை. உனது எல்லையிலேயே நில்லு, இல்லை என்றால் பேட்டிங்கே உனக்கு மறக்கும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று காட்டமாக கூறினார்

இவை அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. விராட் கோலியின் இந்த பேச்சை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது கோலி பவுமாக்கு கொடுத்த பதிலா, இல்லை கங்குலிக்கு அளித்த பதிலா என்றும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்.

இனி தாம் கேப்டனாக இல்லை என்பதால், இனி தம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் விளக்கமும் அளிக்க தேவையில்லை. எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விராட் கோலி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை