SA vs IND: டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்த விராட் கோலி!

Updated: Fri, Jan 21 2022 21:07 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா 1 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது. 

இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இன்று துவங்கிய 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்தி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் களமிறங்கிய விராட் கோலி முதல் 4 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு கேஷவ் மஹராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.

கடந்த போட்டியில் 51 ரன்களை விளாசிய அவர் இப்போட்டியில் டக் அவுட்டானது அவரின் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைய செய்துள்ளது. இப்போட்டியில் கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் அவுட்டான “விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஸ்பின் பவுலருக்கு எதிராக டக் அவுட்டாகி பரிதாபத்துக்கு உள்ளானார்”.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டான 2ஆவது இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் : 34 டக் அவுட்
  • விராட் கோலி : 31* டக் அவுட்
  • வீரேந்திர சேவாக் : 31 டக் அவுட்
  • சௌரவ் கங்குலி : 29 டக் அவுட்

அது மட்டுமல்லாமல் கடந்த 2019 ஆண்டுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் (1 முதல் 4 இடங்களில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள்) என்ற பரிதாபத்திற்கும் உள்ளனர்.

2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:

  • ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) : 11 டக் அவுட்
  • குஷால் மெண்டிஸ் (இலங்கை) : 11 டக் அவுட்
  • விராட் கோலி (இந்தியா) : 9* டக் அவுட்
  • ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) : 9 டக் அவுட்
  • ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) : 8 டக் அவுட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை