ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற 27வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisement

இப்போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

முதல் பேட்டிங்கில் பெங்களூரு அணி நிர்ணயித்த 190 என்ற வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

போட்டியின் இரண்டாவது பாதியில் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட், பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் வீசிய 16 ஓவரின் இரண்டாவது பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார். 

 

Advertisement

அந்த பந்து மின்னல் வேகத்தில் பறக்கவே அதை விராட் கோலி பாய்ந்து தனது ஒற்றை கையால் லாபகமாக கேட்ச் பிடித்து அசத்தினார். மேலும் பந்தை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் மகிழ்ச்சிப்பொங்க வெற்றி செய்கையையும் செய்து காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

விராட் கோலி கேட்ச் பிடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News