பேட்டிங், பவுலிங்கில் அசத்திய துனித் வெல்லாலகே- வைரல் காணொளி!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியானது வநிந்து ஹசரங்கா, மைக்கைல் லூயிஸ் ஆகியொரது பொறுப்பான ஆட்டத்தின் முலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வநிந்து ஹசரங்கா 40 ரன்களையும், மைக்கைல் லூயிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் அணி தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், தீக்ஷனா, ஒபெத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணியிலும் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதிலும், கதீம் 30 ரன்களுக்கும், துனித் வெல்லாலகே 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் நைம் யங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அந்தவகையில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய துனித் வெல்லாலகே பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கினை வகித்தார். இந்நிலையில் துனித் வெல்லாலகே பந்து வீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றியும், பேட்டிங்கில் பவுண்டரிகளையும் விளாசும் காணொளியானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.