‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!

Updated: Mon, Sep 19 2022 15:55 IST
Image Source: Google

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போது ஒரு ஓவரில் தொடர்ந்து அத்தனை பந்துகளையும் பவுண்ட்ரி எல்லையை தாண்டி சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.

அந்த போட்டியின் இறுதியில் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா 20 ஓவர்களில் 218 ரன்களை எடுக்க உதவினார். இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இடது கை பேட்டர் யுவராஜ் 2007 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியிலும் முக்கியப் பங்காற்றினார். இறுதியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்துக்கு எதிரான தனது 15 ஆண்டு கால வெற்றியை தனது 9 மாத மகன் ஓரியன் கீச் சிங் உடன் கொண்டாடினார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், "15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஒன்றாகப் பார்க்க ஒரு சிறந்த துணையைக் கண்டுபிடித்திருக்க முடியாது" என்று பகிர்ந்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் இக்காணொளியானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::