Yuvraj singh
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கடந்த 2011ஆம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றதன் பசுமையான நினைவுகளுடன் இந்திய ரசிகர்கள் மீண்டும் அது போன்ற ஒன்று நிகழ வேண்டும் என்ற ஆவலுடன் உலகக் கோப்பையை எதிர்நோக்குகின்றனர். அதற்காக நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டத்தை ரசிகர்கள் கூர்மையாக அவதானித்து வருகின்றனர். 2011 உலககக் கோப்பை என்றால் தொடர் நாயகன் யுவராஜ் சிங் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. அந்த உலகக் கோப்பை வெற்றி அவருடையது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
யுவராஜ் சிங் ஆல்ரவுண்டராக சிறப்பாக 2011 உலகக் கோப்பையில் செயல்பட்டார். 362 ரன்களையும் 9 மேட்ச்களில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தவிர்க்க முடியாத பங்களிப்பினைச் செய்து வெற்றிக்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இவர்களையெல்லாம் மறந்து தோனி ரசிகர்கள் 2011 உலகக் கோப்பையையே ஏதோ தோனி என்ற ஒரு தனிநபரின் மகாத்மியத்தினால் வென்றது போல் கருதும் போக்கு இருப்பதாக கவுதம் கம்பீர் போன்றோர் கண்டித்தும் வருகின்றனர்.