WBBL 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மகளிர் பிக் பேஷ் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று ஹாபர்டில் கோலகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி, மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற சிட்னி முதலில் மெல்போர்ன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்க வீராங்கனை விலானி அரைசதம் அடித்து உதவினார். இதன் மூலம் 11 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 99 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விலானி 54 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சிட்னி அணியில் ஷஃபாலி வர்மா 8 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி தலா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆலிசா ஹீலி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 10 ஓவர்களிலேயே சிட்னி சிக்சர்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.