இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!

Updated: Wed, Jul 05 2023 22:20 IST
Image Source: Google

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த இந்திய வீரர்கள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர் . இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 

இந்தப் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்து 2023 ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இழந்துள்ளது . இதனால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது . 

மறுபுறம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியை தழுவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . மேலும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரானது 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேசிய கிரேக் பிராட்வெயிட், “நாம் இந்திய அணியுடன் விளையாட இருக்கிறோம் என்பதை வீரர்கள் நினைவில் கொள்ள வேண்டும் . ஒரு போட்டியை சந்திக்க இருக்கும் போது தயாரிப்பு என்பது மிகவும் முக்கியம். ஒரு அணியாக ஒரு பேட்ஸ்மனாக மற்றும் பந்துவீச்சாளராக நாம் எதை சந்திக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்றாக தெரியும் . அதற்கு மனதளவிலும் பயிற்சியின் மூலமும் தயாராக இருக்க வேண்டும்.

நாம் போட்டியில் சந்திக்க இருக்கும் சவால்கள் எல்லாமே நாம் எவ்வாறு ஒரு போட்டிக்கு தயாராகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது . நமக்கு ஆடுகளங்கள் எவ்வாறு இருக்கும் என்று தெரியும் . இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரியான திட்டங்களுடன் விளையாட போகிறோம் என்பதையும் நாம் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் . மேலும் இந்திய அணி பற்றி நமக்கு நன்றாக தெரியும் . 

இனி நாங்கள் அணியாக செய்ய வேண்டியது எல்லாம் இந்தப் போட்டிக்கு நன்றாக தயாராகி எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான். மேலும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் பந்துவீச்சாளராகவும் மனதளவில் போட்டிக்கு தயாராவது திட்டங்களை செயல்படுத்துவதும் முக்கியமான ஒன்று. இந்திய அணிக்கு எதிராக எங்களின் திட்டமிடுதல் இதுதான்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை