பூரன் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ரிஷப் பந்த்!

Updated: Sat, Apr 12 2025 22:35 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்ற் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரிஷப் பந்த், “நிச்சயமாக இந்த வெற்றியானது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரே பாதையில் செல்கிறோம், எங்கள் திறமையை நம்புகிறோம், ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். அதிலும் டெத் ஓவர்கணில் போது எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் யார்க்கர்களை வீசுவதும், மெதுவான பந்துகளை விக்கெட்டுக்குள் வீசுவதையும் சரியாக செய்தனர். 

அதன்மூலம் நாங்கள் அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தோம். இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் நங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை என்றாலும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். நிக்கோலஸ் பூரன் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எதிரணி கூட அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அவர் பேட்டிங் செய்து வரும் விதம் அற்புதமானது” என்று தெரிவித்துள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் 60 ரன்களையும், சாய் சுதர்ஷன் 56 ரன்களையும் சேர்த்த நிலையில் அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 58 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஷ் பதோனி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை