டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்

Updated: Thu, Jul 15 2021 15:23 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, வீரர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களை கற்பித்து வருகிறார். 

அதேசமயம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தும் சஞ்சு சாம்சனும் இலங்கை அணியுடனான தொடரில் விளையாடவுள்ளார். 

இந்நிலையில், ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சாம்சன்,“இந்திய ஏ அணி மற்றும் ஜூனியர் அணியைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகமுடியும் என்றால் அது ராகுல் டிராவிட் எனும் ஒற்றை மனிதனால் மட்டுமே சாத்தியம். அவரிடமிருந்து கிரிக்கெட்டைக் கற்றுக்கொள்ளும் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

ஒரு நாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வுக்கு சென்ற போது ராகுல் டிராவிட் என்னிடம் கேட்டது நினைவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் நான் நன்றாக பேட்டிங் செய்தேன், அவர் என்னிடம் வந்து 'என் அணிக்காக நீங்கள் விளையாட முடியுமா?' என்று கேட்டார். அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம், அதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை இது காட்டுகிறது, நான் அவருடைய ஆலோசனையின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசிக்கிறேன் என்று” தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை