டி20 உலகக்கோப்பை: கெயிலின் சாதனை அளப்பரியது - கீரேன் பொல்லார்ட்!

Updated: Mon, Oct 18 2021 12:04 IST
We back Chris Gayle to do well in the T20 World Cup: Kieron Pollard (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் ஓமன் நாட்டில் நடைபெற்று வர இன்னும் சில தினங்களில் முன்னணி அணிகள் விளையாட தொடங்கிவிடும். அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 23ஆம் தேதி இங்கிலாந்து அணியை துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்முறையும் தாங்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதே எங்களுடைய குறிக்கோள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த டி20 தொடரில் விளையாடும் அந்த அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெயில் குறித்து அவர் கூறுகையில், “கிறிஸ் கெய்ல் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் அளப்பரியது. இன்னும் 97 ரன்கள் அடித்தால் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் அவர் சென்று விடுவார். இருப்பினும் அது அவருடைய இலக்காக இருக்காது. எங்கள் அணிக்காக அவர் கோப்பையை கைப்பற்றி கொடுக்கவே நினைப்பார். 

எங்கள் அணிக்காக பல ஆண்டுகளாக கிறிஸ் கெயில் அதைத்தான் செய்து வருகிறார். பந்துவீச்சாளர்களை பயப்பட வைக்கும் தன்மை உடைய கெயில் நிச்சயம் எங்கள் அணியில் நீடிப்பார். அவர் எங்கள் அணிக்காக ஆற்றிய செயல்பாடுகள் குறித்து என்னிடம் பேச வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு அவர் எங்கள் அணிக்காக உலகக் கோப்பை தொடர்களில் செயல்பட்டுள்ளார். 

நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவர் தனிப்பட்ட முறையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் அணி கோப்பையை வெல்ல உதவுவார் எனவே நிச்சயம் அவர் இந்த உலக கோப்பை தொடரில் எங்கள் அணியுடன் பயணிப்பார்” என பொல்லார்டு கெயிலுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

தற்போது 42 வயதாகும் கெயில் 2006ஆம் ஆண்டு முதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 74 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1854 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை