இவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை - கபில் தேவ்!

Updated: Tue, Oct 25 2022 19:45 IST
'We can’t think about India without him' - Kapil Dev lavishes massive praise on Suryakumar Yadav (Image Source: Google)

இந்திய அணிக்கு மிக முக்கியமான பேட்ஸ்மேனாக உருவெடுத்து இருப்பவர் சூரியகுமார் யாதவ். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றது என்றால்  அதற்கு இவரது பங்களிப்பு முக்கிய காரணம்.

இதுவரை 23 போட்டிகளில் 800 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஒவ்வொரு தொடரிலும் தவறாமல் அரைசதம் அடித்து வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சதம் விலாசினார். உலக கோப்பையிலும் பல்வேறு அணிகளால் கவனிக்க கூடிய வீரராக இருக்கிறார்.

இந்த வருடம் உலக கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக சூர்யகுமார் யாதவ் இருப்பார் என்று இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் இவரை ஒதுக்கி விட்டு இந்தியாவை பற்றி பேச முடியாது என்று கபில் தேவ் கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என்று எவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம். தனது அபாரமான பேட்டிங் மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்து பேச வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் பேட்டிங்கை இவரை ஒதுக்கி வைத்து விட்டு பேச முடியாது. மிகப்பெரிய தாக்கத்தை இந்த உலக கோப்பையில் ஏற்படுத்துவார். அதுவும் விராத் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்களுடன் சேர்ந்து இவர் அபாரமாக விளையாடினால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். வரும் போட்டிகளில் இவரது தாக்கம் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை