பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம் - பாபர் ஆசாம்!

Updated: Sun, Oct 30 2022 19:05 IST
We could chase better than this: Babar Azam (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடி நெதர்லாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடிக் கொடுத்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் ஆக்கர்மேன் 27 ரன்னும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைய விளையாடி வந்தனர். இறுதியில் 13.5 ஓவரில் 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்து பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது. இதில் முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 49 ரன்களும், பாபர் அசாம் 5 பந்துகளில் 4 ரன்களும், பாகர் சமான் 16 பந்துகளில் 20 ரன்களும், ஷான் மசூத் 16 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இஃப்திகார் அகமது 6 ரன்கள் மற்றும் ஷதாப் கான் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர், “வெற்றிபெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செய்லபட்டோம் . அனைவரும் தங்கள் திட்டங்களை நிறைவேற்றினர். இதைவிட சிறப்பாக ரன்களை சேஸ் செய்திருக்கலாம் என்பது என் கருத்து. ஆனால் வெற்றி எப்போதும் நம்பிக்கையைத் தரும். இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக முயற்சி செய்து வெற்றி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை