இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் - ஷிகர் தவான்!

Updated: Sat, May 20 2023 12:13 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 187 ரன்கள் அடித்தது. இதனை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

போட்டி முடிந்தபிறகு தோல்வியடைந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், “பவர்-பிளே ஓவர்களில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது. ஆனால் சாம் கர்ரன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஷாருக் கான் மூவரும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்கள். இன்று பவுலர்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பவுலர்கள் நன்றாக செயல்பட்டு கொடுத்தாலும், நடுவில் நாங்கள் கேட்ச்களை தவறவிட்டது எங்களை சரிவடையவைத்தது.

இந்த பிட்சில் 200 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததால் கூடுதலாக 20 ரன்கள் அடிக்க வேண்டியதை தவறவிட்டுவிட்டோம். இந்த தொடர் முழுவதும் ஒரு சில போட்டிகளில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்திருக்கிறது. ஒரு சில போட்டிகளில் பவுலிங் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. இரண்டையும் ஒட்டுமொத்தமாக செய்யத் தவறிவிட்டோம். இதுதான் நாங்கள் பிளே-ஆப் செல்லமுடியாமல் போனதற்கு காரணமாக பார்க்கிறேன்.

இது மிகவும் இளம்வீரர்களை கொண்ட அணி. அவர்கள் இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். போட்டியை கடைசி வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்று, எங்களது சிறந்த பவுலர்களுக்கு பவுலிங் கொடுத்தேன். இதன் காரணமாக கடைசியில் ஸ்பின்னர்களுக்கு ஓவர் கொடுக்க வேண்டியது ஆகிவிட்டது. கடந்த போட்டியில் ஸ்பின்னருக்கு கொடுத்தேன். அது எங்களுக்கு ஆபத்தாக முடிந்தது. இந்த போட்டியிலும் ஸ்பின்னருக்கு கொடுத்தேன். இரண்டையும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செய்தேன். ஒரு சில நேரம் சாதகமாக முடியும். ஒரு சில நேரம் தவறாக முடியும். துரதிஷ்டவசமாக எங்களுக்கு எடுபடவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை