நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம் - முகமது ரிஸ்வான்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியானது நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததன் காரண்மாக ஒட்டுமொத்த அணியின் மீதும் அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், “இப்போட்டியில் நாங்கள் டாஸை வென்ற நிலையிலும், அந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் 280 ரன்களை எடுத்தால் அது வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நினைத்தோம். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்களில் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் எங்களால் எதிர்பார்த்த ஸ்கோரை அடிக்க முடியவில்லை.
இப்போட்டியில் நானும் சௌத் ஷகீலும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரிக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டோம். ஆனால் அதன்பின் நாங்கள் எங்களுடைய மோசமான ஷாட் தேர்வின் காரணமாக விக்கெட்டுகளை இழந்தது அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இதனால் எங்களால் 240 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு அணி எப்போது தோல்வியடைகிறதோ, அப்போது அந்த அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படைல்லை என்பது தான் அர்த்தம்.
தொடக்கத்தில் நாங்கள் அதிரடியாக தொடங்கினோம் என்று நினைத்தேன். ஆனால் நேரம் செல்ல செல்ல அவர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன. நாங்கள் அதிலிருந்து மீள முயற்சித்த நிலையிலும் எங்களால் அது முடியவில்லை. மேலும் அப்ரார் அஹ்மத் சிறப்பாக பந்துவீச்சி விக்கெட்டை வீழ்த்த்ஜினார். ஆனால் மறுமுனையில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலி மற்றும் ஷுப்மான் கில் ஆட்டத்தை எங்களிடமிருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
எங்கள் பீல்டிங்கிலும் நாங்கள் முன்னேற வேண்டும். இந்த போட்டியிலும் கடந்த போட்டியிலும் நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். அவற்றைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தன் காரணமாக மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பொறுத்தே அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.