பேட்டிங்கில் போதுமான அளவு ரன்களைச் சேர்க்கவில்லை - குசால் மெண்டிஸ்!

Updated: Tue, Oct 31 2023 12:05 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை 241 ரன்களுக்கு சுருட்டியது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் அரைசதம் அடிக்க 45 புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து ஆப்கானிஸ்தான அணி வெற்றி இலக்கை எட்டியது.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ், “எங்கள் அணியில் பேட்டிங் போதிய அளவில் ரன் சேர்க்கவில்லை. நாங்கள் 300 ரன்கள் இல்லை குறைந்தபட்சம் 250 ரன்கள் அடித்திருந்தால் இன்றைய ஆட்டத்தில் தற்காத்துக் கொள்ள போதுமானதாக இருந்திருக்கும். 

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஆனால் பனிப்பொழிவு ஏற்பட்டது காரணமாக எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் பந்து வீச கடுமையாக தடுமாறினார்கள். பனிப்பொழிவு இருந்ததால்தான் எங்களால் சரியாக பந்து வீச முடியவில்லை. 

மேலும் பேட்டிற்கு பந்து நன்றாக இரண்டாவது இன்னிங்ஸில் வந்தது. எங்கள் அணியின் மதுசங்கா நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடினார். அவருடைய ஃபார்மை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என நம்புகிறேன்" என்று கேப்டன் குஷன் மெண்டிஸ் கூறினார். 

இலங்கை அணி முதல் முறையாக ஆஃப்கானிஸ்தானிடம் உலக கோப்பையில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தான அணி உலக கோப்பையில் நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று பலமான அணிகளை நடப்பு தொடரில் வீழ்த்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை