நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம் - ரியான் பராக்!

Updated: Fri, May 02 2025 11:20 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியன் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.  இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் கரண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “மும்பை அணி விளையாடிய விதத்திற்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்றது, ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலைத்தன்மையை வைத்திருந்தது மற்றும் இறுதியில் வேகத்தை அதிகரித்தது அனைத்தும் சிறப்பாக இருந்தது. எங்கள் பேட்டிங்கைப் பொறுத்தவரை இது எங்கள் நாள் அல்ல.  இந்த போட்டியில் 190 அல்லது 200 ரன்களை சேஸிங் செய்வதாக இருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும். 

ஆனால் இறுதியில் ஹார்திக் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அதை உண்மையில் மாற்றினர், நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம், ஆனால் இன்று முழுமையாக நங்கள் சோபிக்க தவறிவிட்டோம். நாங்கள் நல்ல தொடக்கங்களைப் பெற்று வருகிறோம், ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் அதனை செய்ய முடியவில்லை. ஆனால் நானும் துருவ் ஜூரெலும் பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழக்கும் போது நாங்கள் முன்னேறுவது மிகவும் கடினமாந்து. 

Also Read: LIVE Cricket Score

ஆனாலும் நாங்கள் இன்னும் எங்களை ஆதரிக்கிறோம். இதுபோல் மற்றொரு சூழ்நிலை வந்தால் நாங்கள் அதற்குத் தயாராக இருப்போம். இந்த சீசனில் நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளோம், அதேசமயம் நிறைய தவறுகளையும் செய்துள்ளோம். அதனால் நாங்கள் சரியாகச் செய்த விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறோம், அதேசமய நாங்கள் எங்களின் தவறுகளையும் சரிசெய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை