நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!

Updated: Tue, Aug 24 2021 14:19 IST
Image Source: Google

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சியின் போது பேசிய இந்திய அணி துணைக்கேப்டன் அஜிங்ஜியா ரஹானே, எங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரஹானே,“மக்கள் என்னை பற்றி பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தான். முக்கியமான நபர்கள் பற்றி தான் மக்கள் பேசுவார்கள் என்பதை எப்பொழுதும் நான் நம்புகிறேன். அது குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தமட்டில் அணிக்கு என்ன பங்களிக்கிறோம் என்பது தான் முக்கியமாகும். நாட்டுக்காக விளையாடுவது உத்வேகம் அளிக்கிறது. எனவே நான் விமர்சனம் குறித்து பொருட்படுத்துவது கிடையாது.

2ஆவது டெஸ்டில் அணிக்கு பங்களிப்பை அளித்தது திருப்திகரமாக இருந்தது. சொந்த ஆட்டத்தை விட அணியின் நலன் தான் முக்கியமானதாகும். அணிக்கு என்ன தேவையோ? அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று எப்போதும் பேசுகிறோம். ஆனால் அவரது அந்த இன்னிங்ஸ் (லார்ட்ஸ் 2ஆவது இன்னிங்ஸ்) அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் 200 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டார்.

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

நானும், புஜாராவும் நீண்ட நாட்களாக இணைந்து விளையாடி வருகிறோம். எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை எந்த மாதிரி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். மற்றபடி எங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து நாங்கள் சிந்திப்பது கிடையாது என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை