பும்ரா இடம் பெறவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும் - அஜிங்கியா ரஹானே
India vs England 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாத நிலையில் அர்ஷ்தீப் சிங்கை லெவனில் சேர்க்க வேண்டும் என்று இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக பும்ரா மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் இத்தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் எதில் பும்ரா விளையாடுவார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த போட்டியில் பும்ரா விளையாடவில்லை என்றால் அர்ஷ்தீப் சிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
ஏனென்றால் இங்கிலாந்தில், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவை. மேலும் அவரது பந்துவீச்சு வித்தியாசமாக இருக்கும் காரணத்தால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான உதவியை அவரால் உருவாக்க முடியும். எனவே, ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் விளையாடவில்லை என்றால், அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.