ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை கணித்த அஜிங்கியா ரஹானே!

Updated: Thu, Aug 21 2025 19:29 IST
Image Source: Google

Ajinkya Rahane picks India Playing XI: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே கணித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில், ஷுப்மன் கில்லுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இதில் எந்த 11 பேர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர் அஜிங்கியா ரஹானே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அந்த அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். 

ஏனெனில் சுப்மன் கில் அணியின் துணைக்கேப்டனாக உள்ளதால் அவருக்கு தொடக்க வீரர் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், மூன்றாம் வரிசையில் திலக் வர்மாவையும், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ள அவர், ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும், அணியின் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இதனால் அவர் தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 

பந்துவீச்சில், வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதே நேரத்தில், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்திருக்கும் ரஹானே, 11ஆவது வீரருக்கான இடத்தில் ஹர்ஷித் ராணா அல்லது வருண் சக்ரவர்த்தி இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார். 

அஜிங்கியா ரஹானே தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி / ஹர்ஷித் ராணா.

Also Read: LIVE Cricket Score

இந்திய அணி: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், ரின்கு சிங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை