விண்டிஸை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் - காகிசோ ரபாடா!

Updated: Sun, Aug 04 2024 15:31 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி இம்மாதம் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டாது. இதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஜோஷுவா டா சில்வா அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கீமார் ரோச் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனையடுத்து இரு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஒருசில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “அவர்களை வெல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வெஸ்ட் இண்டீஸ் எப்போது நான் சுற்றுப்பயணம் செய்ய மிகவும் பிடித்த இடம். நான் அங்கு விளையாடுவதை எப்போது விரும்புகிறேன். ஏனெனில் இங்கே கிரிக்கெட்டிற்கு என நிறைய வரலாறு உள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கை கொடுப்பது. விளையாட்டு என்பது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை அளிப்பதாகும். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்ததை நாங்கள் பார்த்துள்ளோம். அது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் சொயலாக இருந்துள்ளது. அது இனிவரும் போட்டிகளிலும் நடக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை