தோல்வியில் இருந்து நாம் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் - அஜிங்கியா ரஹனே!

Updated: Tue, Apr 22 2025 11:54 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியைத் தழுவியது. 

இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே, “இந்த மைதானத்தில் 199 ரன்களை சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன், நாங்கள் பந்து வீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தோம். மேலும் நங்கள் நல்ல தொடக்கத்தை எதிர்பார்த்தோம், ஆனால் இத்தொடர் முழுவதும் அதனை பெற முடியாமல் நாங்கள் போராடி வருகிறோம். இந்த தோல்வியில் இருந்து நாம் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த போட்டிக்கான பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது, ஆனால் நாங்கள் பந்து வீசும்போது 210 அல்லது 200 க்குக் கீழே ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும், குறிப்பாக மிடில் ஓவர்களில். எங்களுக்கு சிறந்த தொடக்கங்கள் தேவை, எங்கள் பந்து வீச்சாளர்களிடமிருந்து எந்த புகாரும் இல்லை. எங்களிடம் மிடில் ஆர்டரில் தரமான பேட்டர்கள் உள்ளனர், நான் அவர்களை ஆதரிக்கிறேன்.

Also Read: LIVE Cricket Score

ஆனால் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். அங்கிரிஷ் நன்றாக பேட்டிங் செய்வதைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இன்று மற்ற பேட்டர்களை மேலே தள்ள நாங்கள் விரும்பிய சூழ்நிலை இருந்தது. இந்த வடிவம் ஒரு பேட்ஸ்மேனாக தைரியமாக இருப்பது பற்றியது, கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது, தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், நேர்மறையான மனநிலையைக் கொண்டிருங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை