சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களையும், அவருக்கு துணையாக சமீர் ரிஸ்வி 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “பவர் பிளேக்குப் பிறகு பிட்ச் மெதுவாகவும், இரண்டு வேகமாகவும் இருந்தது என்று நினைக்கிறேன். எனவே பவர்பிளேக்குப் பிறகு நாங்கள் 170 ரன்களை அடித்தால் போதும் என்றே எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ஸ்கோரை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் . இன்றைய போட்டியில் சிமர்ஜீத் சிறப்பாக பந்து வீசினார். சொந்த மைதானங்களைத் தாண்டி மற்ற மைதானங்கள் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அதனால் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்த வழி என்று நாங்கள் நினைத்தோம். இங்கு விளையாடுவதற்குப் பழகியதால் எவ்வளவு இலக்கை துரத்தலாம் என்று அவர்களுக்கு ஒரு திட்டங்கள் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் மெதுவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அதற்கு பதிலாக விக்கெட் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறிவிட்டது. ஒருவேளை இது இரவு போட்டியாக இருந்திருந்தால் நிச்சயம் சோஸிங்கைத் தான் தேர்வு செய்திருப்பேன். பகலில் நடக்கும் போட்டி என்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட கடினமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது பற்றி யோசித்துக்கொண்டே இருப்பது இயல்பானது, ஆனால் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எனது அணி வீரர்களிடம் நம் கையில் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் சொல்ல விரும்புகிறேன். செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News