தினேஷ் கார்த்திக்கு முன் அக்ஸர் களமிறங்கியது ஏன்? - ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!

Updated: Mon, Jun 13 2022 20:30 IST
Image Source: Google

இந்திய அணி தொடர்ந்து 2 டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் தென் ஆப்பிரிக்காவிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா பயன்படுத்திய யுத்தி மற்றும் தோல்விக்கான காரணம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

அப்போது பேசிய அவர், “எங்களுடைய கவனம் எல்லாம் இருத்தரப்பு தொடரை வெல்வதில் இல்லை. உலகக் கோப்பை மீது தான் எங்கள் கவனமே உள்ளது. இப்போது நடைபெறும் போட்டிகளை எல்லாம் பயிற்சியாகவும், பாடமாகவும் தான் கருதுகிறோம். அணியின் ஆலோசனை கூட்டத்தில் போட்டிக்கான திட்டத்தை வகுக்கிறோம்.

ஆனால், அதனை போட்டியில் நடைமுறைப்படுத்துவதில் தவறு நீடிக்கிறது. இந்த தவறை ஒரு அணியாக கற்று கொண்டு அடுத்த போட்டியில் திருத்தி கொள்ள முயற்சி செய்வோம். அது தான் ஆஸ்திரேலிய பயணத்துக்கு முக்கியமானவை. நாங்கள் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக தான் ஆடுவோம் என்று முடிவு செய்து இருந்தோம்.

அதனால் தான் விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், ரன்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்தினோம். இதே பிளான் தான் இனி எதிர்காலத்திலும் செயல்படுத்த உள்ளோம். தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் பட்டேலை அனுப்புவது என்பது அணி எடுத்த முடிவு தான். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட கூடியவர். அதனால் அவருடைய பங்கு 16 ஓவரில் தான் தேவைப்படும்.

நேற்று இருந்த சூழலில் எங்களுக்கு 13வது ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் வீரர் தேவைப்படவில்லை. அக்சர் பட்டேல் சிங்கிள்ஸ் ஆடி நல்ல கம்பெனி தருவார் என்பதால் தான் இந்த முடிவு எடுத்தோம். இனி வரும் போட்டியிலும், இதே யுத்தியை தான் செயல்படுத்துவோம்.தினேண் கார்த்திக்கிற்கும் அப்படி விளையாட தெரியும், ஆனால் நாங்கள் முதல் பந்தில் இருந்து அடிக்கும் வகையில் தயார்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை