ENG vs IND, 5th Test: முகமது ஷமியின் ஃபார்ம் குறித்து பேசிய பரத் அருண்!
தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெரும்பாலானவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவருடைய பந்திவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை. பின் தன்னுடைய கடின முயற்சியால் 2021 முதல் மீண்டும் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை முகமது சமி வெளிப்படுத்த துவங்கியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி வரும் முகமது சமி எப்படி மோசமான பார்மிலிருந்து மீண்டெழுந்தார் என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதில், “பயிற்சியாளராக நாங்கள் வெறும் பந்துவீச்சை மட்டும் பார்ப்பது கிடையாது அதற்கான ஒட்டுமொத்த பிராசஸையும் (process)பார்ப்போம், சமி சில நேரங்களில் மோசமான பந்துவீச்சாள் ரன்களை அதிகமாக கொடுத்து விடுவார் மேலும் விக்கெட் எதுவும் எடுக்காமல் தினருவார், இதிலிருந்து அவரால் மீண்டு வர முடியாது என்று நினைக்கும் வகையில் அவருடைய பந்துவீச்சு மோசமாக இருக்கும்.
இதன் காரணமாக மொத்த பந்துவீச்சாளர்களாலும் சிறப்பாக செயல்பட முடியாது, ஆனால் தற்போதைய தொடர்களில் ஒரு பந்தை லெக் சைடில் இருந்து ஆப்சைட் சிறப்பாக ஸ்விங் செய்து அதேபோன்று மீண்டும் மீண்டும் செய்ய முயற்சித்து லெக் சைடு பௌண்டரிகளை கொடுத்து விடுகிறார்.
ஒரு பந்துவீச்சாளரை பொருத்தவரையில் எப்படியாவது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு நிச்சயம் ஒரு திட்டம் தேவை, நீங்கள் சிறப்பாக பந்து வீசும் உங்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்றால் அது உங்களது அணி வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும், இது உங்கள் திறமையை மட்டும் கேள்விக்குறியாகாமல் உங்களுடைய அணியையும் பாதிக்கும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு நிலையான ஆட்டம் தான்” என்று தெரிவித்துள்ளார்.